பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

67பார்த்தது
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!
புதுக்கோட்டை குறுவை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2024 25 ஆம் ஆண்டிற்கு நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ரூபாய் 35 ஆயிரத்து 600. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூபாய் 7. 12 மக்காசோளத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ரூபாய் 29 ஆயிரத்து 400 விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை ஏக்கருக்கு ₹588 நிலக்கடலைக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ரூபாய் 28, 300 விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூபாய் 566 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயிர் கடன் பெரும் விவசாயிகள் அனைவரும் தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் கடன் பெறாத விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வணிக வங்கிகள் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி