புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே வவ்வல்பட்டியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தனியார் கிரஷரை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் கிரசர் நுழைவு வாயில் முன்பு சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல கட்ட போராட்டத்திற்கு பிறகும், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.