புதுகை -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களூர் அமைந்துள்ளது. இந்த ஊரை சுற்றியுள்ள வாராப்பூர், மட்டையம்பட்டி நால்ரோடு, ரைஸ் மில், மாந்தாங்குடி, வைத்துார், மங்கலத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் மதுரை, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பெருங்களூர் வந்தே பேருந்து ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் எந்த நேரமும் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் காத்திருப்பது வழக்கம்.
சாலையோரம் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க பெருங்களூரில் பேருந்து நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.