1, 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக இருவர் கைது!

50பார்த்தது
1, 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக இருவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1, 500 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோட்டைப்பட்டினம்- அறந்தாங்கி சாலையில் உதவி ஆய்வாளர் கார்த்தி தலைமையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நாகுடி பகுதி சாலையில், ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்திசோதனையிட்டனர். அதில் 30 மூட்டைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதைக் கைப்பற்றி போலீஸார், இதுதொடர்பாக மணமேல்குடி பொத்தையன்குடியிருப்பைச் சேர்ந்த சின்னதம்பி மகன் ஜெயபால் (53), திருமயம் கீழாநிலை கும்பங்குடியை சேர்ந்த ராமன் மகன் சிவாஜி (44) ஆகிய இருவரையும்கைது செய்தன.

தொடர்புடைய செய்தி