புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள
ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், களைக் கொல்லி, உரம் மற்றும் வேளாண்மை சார்ந்த இடுபொருட்கள் 100 சதவிகித மாண்யத்தில் அரசு வழங்க வலியுறுத்தியும், 2023 - 24ம் ஆண்டிற்கான பயிர்காப்பீட்டு தொகையைவிவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் மற்றும் ஆவுடையார்கோவில் மின்சார வாரியத்தின் சார்பில் அடிக்கடி
மின்தடை ஏற்பட்டு வருவதை கண்டித்தும் அதை சரிசெய்ய வேண்டும் என்றும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத் தியும். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் சிபிஐ. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் தலைமையிலும், விவசாய சங்க ஒன்றியதலைவர் சேவுகப்பெருமாள் முன்னிலை யிலும் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்சங்க ஒன்றிய செயலாளர் ஜெபமாலை பிச்சை, விவசாய தொழிலாளர்சங்க ஒன்றிய துணைச்செயலாளர் இளங்கோவன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.