சமீபத்திய பேட்டிகள் தோலுரித்துத் தொங்கியதால் அரைத்தை மாவை மொத்தமாக அரைத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார். இபிஎஸ்ஸை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எக்ஸ் தளத்திலும், அறிக்கைகளிலும், குற்றச்சாட்டுகள் புஸ்வானமான நிலையில் யூடியூபிலும் பொய் பரப்புவதா? ஃபெஞ்சல் புயல், சாத்தனூர் அணை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் என பல பொய்களை திமுக தவிடுபொடியாக்கி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.