மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் ஆற்றில் இருந்து கடலுக்கு செல்லும் தண்ணீர் ரோஸ் நிறத்தில் இருப்பதால் மீனவர்களும் பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர். இதனால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் இந்த ரோஸ் நிற தண்ணீர் எங்கிருந்து வந்தது என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் கடலில் உள்ள மீன்களும் உயிரிழக்கக்கூடும் என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.