லாட்டரி விற்பனை செய்த இளைஞர் அதிரடி கைது

59பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள மாந்தான்குடியைச் சேர்ந்தவர் ரவி மகன் அருண்குமார் (27). இவர், மணமேல்குடி தண்டலை முக்கம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்துள்ளார். அப்போது, அங்கு ரோந்து வந்த மணமேல்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக அருண்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி