ஸ்ரீ சிங்கமுக காளி, மற்றும் ஸ்ரீ கருப்பர்ஆலய ஆடி திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம். நடைபெற்றது சீறிப்பாய்ந்த மாட்டு வண்டி பந்தயத்தைஆயிரக்கணக்கான பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகாமையில் உள்ள சிறு கடவாக் கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிங்கமுக காளிஸ்ரீ கருப்பர் ஆலய ஆடித்திருவிழாவை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். இதில் பெரிய மாடு சிறிய மாடு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது இதில் பெரிய மாட்டு பிரிவில் 12 ஜோடிகள் மாடுகளும் சிறிய மாடு பிரிவில் 30 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டது இதில் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை தஞ்சாவூர்போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் கலந்து கொண்டது
இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பணமும் குத்துவிளக்கும் பரிசாக வழங்கப்பட்டதுஇந்த விழாவை சிறு கடவாக் கோட்டை கிராமத்தினரும் பசும்பொன் பாய்ஸ் இளைஞர்களும் சேர்ந்து நடத்தினர்