துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர்ஸ் கார் ரேஸில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். அவரைப் பார்ப்பதற்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். இந்நிலையில், தனது ரசிகர்களுக்காக நடிகர் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்க எல்லோரும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன். உங்க குடும்பத்தை பாருங்க. நமது இலக்கில் வெற்றியடைந்தால் நல்லது தோல்வியடைந்தால் சோர்ந்துவிடாதீர்கள்” என ரசிகர்களுக்காக மோட்டிவேஷனலாக பேசியுள்ளார்.