புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் சாதாரண நகர மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டமானது நகர்மன்ற தலைவர் ஆனந்த் தலைமையிலும், நகரமன்ற துணைத் தலைவர் முத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் 27 வார்டு நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு அந்தந்த பகுதி உள்ள குறைகளை முன்வைத்தனர். நகர மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என தலைவர் கூறினார்.