அமைச்சர் செந்தில் பாலாஜியை தியாகி என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அதை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “செந்தில் பாலாஜி தியாகி என்றால் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் துரோகிகளா? மக்களுக்கு நீதிபதியாக இருக்க வேண்டிய முதலமைச்சர், செந்தில் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது. செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றும்படி பரிந்துரைக்க வேண்டும்." என்றார்.