அறந்தாங்கி: நடுரோட்டில் போதை இளைஞர்கள் அடிதடி; வீடியோ வைரல்

1579பார்த்தது
அறந்தாங்கியில் நடுரோட்டில் கஞ்சா போதையில் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகரங்களில் ஒன்றாறது அறந்தாங்கி நகரமாகும். இங்கு இளைஞர்கள் பலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி என்ன செய்கிறோம் என்று உணராமல் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகம் நடமாடக்கூடிய பெரியகடைவீதியில் இடையூறு ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் மக்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள புதுக்கோட்டை பிரதான சாலையில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா போதையில் ஒருவரையொருவர் கற்கலால் தாக்கிக்கொண்டனர். அப்போது ஒரு இளைஞர் மற்றொருவரை அடித்து சாலையில் தள்ளிவிட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இது சம்ந்தமாக அறந்தாங்கி காவல்துறையினர் போதை இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி