ஆலங்குடியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கலிபுல்லா நகரில் உள்ள பெட்டிக்க டையில் புகையிலை பொருட்கள் விற்றது ரோஜா நகர் அழகர்சாமி மனைவி கலைச்செல்வி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் திருவரங்குளம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரெங்கசாமிக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், விரைந்து வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலங்குடி போலீசார் உதவியுடன் கடைக்கு 'சீல்' வைத்தனர்.