குப்பை கழிவுகளில் தீ விபத்து!

51பார்த்தது
புதுக்கோட்டை, ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் பேரூராட்சி நிர்வாகத்தால் புதுக்கோட்டை செல்லும் சாலையில் அம்புலி ஆற்று பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. மேலும், ஆற்றில் ஆக்ரமித்திருந்த கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகள் அகற்றப்பட்டு, ஆற்றங்கரையில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குப்பை கழிவுகள் நேற்று தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காணப்பட்டது. சாலையில் சென்ற வாகன ஓட்டுனர்கள் கடும் அவதியடைந்தனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி