காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

1096பார்த்தது
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே வடகாட்டில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம. சுப்புராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில நிர்வாகிகள் இப்ராகிம் , கண்ணன் வட்டார தலைவர்கள் பன்னீர்செல்வம் , பூங்குன்றன் , ராகுல் ராஜ், தனராஜ், ஆலங்குடி நகர தலைவர் அரங்குளவன், சரவணன், இளைஞர் காங்கிரஸ் மனோஜ் , பாலகிருஷ்ணன் , குமாரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி