சுத்தியுடன் புள்ளிங்கோ ஸ்டைலில் நின்றிருந்த 3 பேர் கைது

53பார்த்தது
புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆரியப்பாளையம் மங்களபுரி நகர் அருகே சென்றபோது, அங்கு புள்ளிங்கோ ஸ்டைலில் சந்தேகத்திற்குரிய வகையில் 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, அவர்களிடம் ஒரு வீச்சரிவாள், 2 கத்தி மற்றும் ஒரு கூல் லிப் பாக்கெட் வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர்கள் சாரம் நடுத்தெருவை சேர்ந்த சூரியா (18), வில்லியனூர் ஆரியப்பாளையம் சேர்ந்த ரோகித் (18), பிச்சைவீரன் பேட்டை சேர்ந்த மணிகண்டன் என்பதும், இதில் சூரியா, ரோகித் ஆகியோர் அரசு கல்லூரியில் படித்து வருவதும், மணிகண்டன் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், இவர்கள் யாரையாவது கொலை செய்யும் திட்டத்தோடு நின்றிருந்தார்களா அல்லது கத்தியை காட்டி வழிப்பறி செய்யும் திட்டத்தோடு இருந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி