காரைக்காலில் உலக உணவு தினம் விழிப்புணர்வு

50பார்த்தது
காரைக்காலில் உலக உணவு தினம் விழிப்புணர்வு
காரைக்கால் அடுத்த மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக உணவு தினம் நிலைய முதல்வரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ரவி அவர்களின் வழிகாட்டுதலின்படி கொண்டாடப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர் மருத்துவர் கோபு அவர்கள் இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்து உலக உணவு தினம் கொண்டாடப்படுவதின் நோக்கம்.

முக்கியத்துவம் உணவு முறைகள் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் நவீன உலகின் வாழ்வியல் முறைகள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுமார் 50 -க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி