காரைக்காலில் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதிக்க கூடாது. இதனை மீறி வாகனம் ஓட்டினால் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் மூலம் ரூபாய் 25, 000/- அபராதம் அல்லது மூன்று வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்தார்.