காரைக்கால் சின்னக்கண்ணு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அருணாச்சலம் (71). இவர். தனது வீட்டு மாடியில் பூப்பறிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். குடும்பத்தினர் அவரை தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.