காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற பார்வதீஸ்வரர் கோயில் நிலங்களை அரசு இலவச மனை பட்டா வழங்குவது போல போலி ஆவணங்களை தயார் செய்து விற்பனை செய்த வழக்கில் தற்போது வழக்கறிஞரும் பத்திர எழுத்தாளருமான கார்த்தி என்பவரை நகர காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கறிஞரும் பத்திர எழுத்தாளருமான கார்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.