காரைக்கால் மாவட்ட ஆட்சியராக மணிகண்டன பொறுப்பேற்று முதன் முறையாக இன்று அரசு பொது மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார்கள். அப்பொழுது காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட பணியிடங்கள் சம்பந்தமாக கோப்புகளை எனக்கு அனுப்பி வைக்கும் படியும் அரசிற்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவமனை முழுவதும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.