காரைக்கால் சேர்ந்தவர் முகமது அலி. 17 வயது சிறுமி இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தனி குடுத்தனம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அலியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.