மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் பர்பானியின் கங்காகேட்நாகா பகுதியில் வசித்துவரும் குண்டலிக் உத்தம்கலே என்பவர் தனது மனைவியான மைனாகுண்டலிக் காலே (34) என்பவரை கடந்த 26ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். விசாரணையில், கர்ப்பமாக இருந்த மைனா மூன்றாவதும் பெண் குழந்தை பெற்றெடுத்தால் ஆத்திரமடைந்த குண்டலிக் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். இதுகுறித்து மைனாவின் தங்கை அளித்த புகாரின் பேரில் குண்டலிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.