கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டத்தில் ஒரு திருநங்கை நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிதா என்ற திருநங்கைக்கும் சக திருநங்கைக்கும் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், அங்கிதாவை சக திருநங்கைகள் நிர்வாணமாக்கி அவர் தலையை மொட்டையடித்து தாக்கியுள்ளனர். இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.