இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

64பார்த்தது
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் பப்புவாவில் இன்று (டிச.,31) அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 39 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. பப்புவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மேலும் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் சில இடங்களில் 6.3 மற்றும் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி