உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த அக். 23-இல் வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டியை ஃபதே கான் (25) என்ற இளைஞர் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ஃபதே கானை நேற்று (அக். 25) போலீசார் பிடிக்க முயன்ற போது அவன் தப்பினான். இதையடுத்து அவன் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.