பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு

65பார்த்தது
பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மூன்றாம் உலகப் போருக்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் தொடர் தாக்குதலை நடத்தினால், இஸ்ரேலை காப்பாற்ற அமெரிக்கா முன்வரும் என்று அப்பட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த போர் பதற்றம் இந்தியாவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம். இந்த போரானது இந்திய பணவீக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயரும். அதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும். இந்த நேரத்தில் பணவீக்கம் உயர்ந்தால் இந்திய தேர்தலில் அத பாதிப்பை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி