சக்கரத்தில் மாட்டிய நண்பனுக்காக உதவி கேட்ட நாய்

57பார்த்தது
விலங்குகளிடமிருந்து மனிதர்கள் தினம் தினம் எதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அந்த வகையில் நாயின் வீடியோ ஒன்று பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதில் நாய் ஒன்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு லாரியின் சக்கரத்தில் மாட்டிக் கொள்கிறது. அதைப் பார்த்த மற்றொரு நாய், கயிறை இழுத்து அதை விடுவிக்க முயற்சி செய்கிறது. பின்னர் அந்த லாரியின் உரிமையாளரை உதவக்கு அழைத்து வந்து நாயை மீட்டு செல்கிறது. விலங்குகளிடமிருந்து நட்பை கற்றுக் கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.