தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிபட்டு வந்தனர். இதனை மூடக்கூறி, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அமர்வு, அந்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டது. இதனால், அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு கொடுத்தும் கொண்டாடினார்.