பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்.

58பார்த்தது
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 7: 00 மணி அளவில், பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டபொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில், திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் 1ம் தேதி அன்று பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் அனைத்து , ஒன்றியம் கிளைக் கழகம் மற்றும் கிராம, நகர்ப்புற பகுதியில் புதிதாக திமுக கொடிகளை ஏற்றி, இனிப்புகள் வழங்கி, நழிவடைந்தோருக்கு நலத்திட்டங்களை வழங்குவது என்றும், மத்திய அரசு தமிழை அழிக்கும் நோக்கில் கல்வி வளர்ச்சி நிதியை தராமல் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து, திமுக தலைமையின் அறிவுறுத்தல் படி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவது என்றும், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும், இந்தி திணிப்பை எதிர்த்து பெரம்பலூர் மாவட்டம் திமுக சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளவது என்றும் கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட திமுகவை சேர்ந்த மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி