திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, முகூர்த்தக்காலுக்கு இரவு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்பட்டன. முகூர்த்தக்காலை கோயிலின் வெளிப்புறமாக ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு நடப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.