மெக்சிகோ கடல் பகுதியில் ‘டூம்ஸ் டே’ (இறுதி நாள்) மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ (Oar) மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானியர்கள் இந்த மீனை கடவுளின் தூதர் என அழைக்கின்றனர். பெரும்பாலும், வரப்போகும் பேரழிவுகளின் அறிகுறியாக இவை இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கும் எனக் கருதப்படுகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் மிகப்பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்திய சுனாமிக்கு முன்னர் சுமார் 20 ’டூம்ஸ் டே’ மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.