பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பஷேரா தலைமையில் பெரம்பலூரில் உள்ள வடக்கு மாதவி கிராமத்தில் கிராம 05. 10. 2024 -ம் தேதி பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தல், சைபர் குற்றங்கள், தற்கொலைகள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட எஸ்பி போதைப் பொருட்களுக்கு அடிமையாவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், குழந்தை திருமணத்தால் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள், தற்கொலைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தல், தலைகவசம் சீட்டுபேல்ட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களில் சிக்கிக்கொள்ளாமல் எவ்வாறு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது பற்றியும் மற்றும் சிசிடிவி கேமராவின் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மூளை செயல் இழந்து, மனதளவிலும் உடலளவிலும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே போதைப் பழக்கத்தை முற்றிலும் ஒழித்து போதைப் பழக்கம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம் என்று கிராம பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்