காய்ச்சல் டானிக் குடித்த குழந்தை கவலைக்கிடம்

64பார்த்தது
காய்ச்சல் டானிக் குடித்த குழந்தை கவலைக்கிடம்
கேரளாவின் கண்ணூரில் 8 மாத குழந்தைக்கு, மெடிக்கல் கடை மருந்தாளுனர்கள் வழங்கிய மருந்தால் குழந்தை கவலைக்கிடமாக உள்ளது. அதிக டோஸ் கொண்ட மருந்தை கொடுத்ததால் குழந்தையின் உடல்நிலை தற்போது மோசமாகியுள்ளது. மருத்துவர் சரியாக மருந்து எழுதி கொடுத்தாலும், மருந்தாளுனர்கள் குழந்தைக்கு அதிக அளவில் மருந்தை கொடுக்க அறிவுறுத்தியுள்ளனர். குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமானால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி