போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை

75பார்த்தது
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 5 வருடம் சிறை, 50,000 ரூபாய் அபராதம். பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு.

பெரம்பலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் குற்றவாளியான பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் நடேசன் (35) மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு வழக்கு விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது,

பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கில் இன்று(செப்.5) குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவ்வழக்கின் குற்றவாளியான நடேனுக்கு 5 வருட சிறை தண்டனையுடன், ரூபாய் 50,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 1 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், என்றும் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றவாளி திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லிப்பட்டார்.

தொடர்புடைய செய்தி