‘கமலுடன் மோதும் பார்த்திபன்’.. ஏன் இந்த முடிவு?

72பார்த்தது
‘கமலுடன் மோதும் பார்த்திபன்’.. ஏன் இந்த முடிவு?
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஜூலை 12ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதே வேளையில், பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டீன்ஸ்’ படமும் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். ‘இந்தியன் 2’ படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த பின்னரே பார்த்திபன் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி