நெல் விவசாயிகள் நலன் கருதி நடப்பாண்டிலும் (2024-25) 1.9.2024 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும். சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2450, பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2405 வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். விவசாயிகள் செப். 1ஆம் தேதி முதல் புதிய கொள்முதல் விலையில் தங்களது நெல்லினை அரசு சார்பில் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.