சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கைது

58பார்த்தது
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கைது
நடிகர் சல்மான் கானின் வீட்டின் வெளியே கடந்த 14ஆம் தேதி அதிகாலை பைக்கில் வந்த இருவர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் குஜராத்தில் உள்ள பூஜ் நகரில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி சாஹப் குப்தா (24), சாகர் ஸ்ரீஜோகேந்திர பால் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் இன்று காலை மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி