எங்கள் காதுகள் பாவமில்லையா.. முதல்வர் ஸ்டாலின்

66பார்த்தது
எங்கள் காதுகள் பாவமில்லையா.. முதல்வர் ஸ்டாலின்
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க. அரசு. இது அப்பட்டமான பொய் கணக்கு. உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி, சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று தமிழ் மக்கள் காதில் பூச்சுற்றுகிறது பாஜக. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா! என X தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி