ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் நாட்களில் 10 நாட்களுக்கு விடுமுறை எடுத்து கொள்ளும் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது சீனாவை சேர்ந்த PANG DONG LAI என்ற நிறுவனம். வேலை மற்றும் வாழ்க்கை சூழலை சீராக வைத்து கொள்ள இந்த சலுகை வழங்கப்படுவதாகவும், ஊழியர்கள் இதன் மூலம் நிம்மதியாக பணியாற்றலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலங்களில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் தனது வளர்ச்சிக்காகவும் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தவண்ணம் உள்ளது.