நாம் தமிழருக்கு ஆதரவு அளிக்கிறாரா விஜய்..?

75பார்த்தது
நாம் தமிழருக்கு ஆதரவு அளிக்கிறாரா விஜய்..?
மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சிக்கு நடிகர் விஜய் மறைமுக ஆதரவு தெரிவிப்பது போன்ற போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே விஜய் அறிவித்திருந்தார். ஆனால் மக்களவை தேர்தலில் விஜய் கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கோட்' (The Greatest of All Time) படத்தின் விசில் போடு பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது.

இதற்கான போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், சீமான் கட்சியின் மைக் சின்னம் குறியீடாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் திமுகவுக்கு மறைமுக ஆதரவு போன்று வாக்கு செலுத்தும் நாளில் கருப்பு, சிவப்பு சைக்கிளில் சென்று விஜய் வாக்கு செலுத்தியிருந்தார். அதே போன்று இந்த முறை ஒருவேளை நாதகவுக்கு ஆதரவு அளிக்கிறாரா என்ற கேள்விகள் எழத்தொடங்கியிருக்கிறது.

தொடர்புடைய செய்தி