பாஜக தேர்தல் அறிக்கையை விளாசிய ராகுல் காந்தி

76பார்த்தது
பாஜக தேர்தல் அறிக்கையை விளாசிய ராகுல் காந்தி
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டார். இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், “பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் மோடியின் உரையில் பணவீக்கம், வேலையின்மை என்ற 2 வார்த்தைகள் இல்லை. மக்களின் முக்கியமான பிரச்சனைகளை விவாதிக்க அக்கட்சி விரும்பவில்லை. இந்த முறை மோடியின் வலையில் இளைஞர்கள் கூட்டம் சிக்காது” என்றார்.

தொடர்புடைய செய்தி