அண்ணன் தம்பிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி

40460பார்த்தது
அண்ணன் தம்பிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி
தெலங்கானா நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒட்டியப்பள்ளி கிராமத்தில் கோடை வெயிலை சமாளிக்க, திருப்பதி (19), மகேஷ் (19), நரேஷ் (18), சைதேஜா (19), வினோத் (18) ஆகிய 5 இளைஞர்கள் குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது திருப்பதி, மகேஷ், நரேஷ் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். வினோத்தும் நீரில் மூழ்கிய நிலையில் அவரை சைதேஜா கஷ்டப்பட்டு கரைக்கு இழுத்து வந்துள்ளார். உயிரிழந்த மூவரும் உடன்பிறந்த அண்ணன் - தம்பிகள் ஆவர். மகன்கள் மூவரையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்த பெற்றோர் மனமுடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி