மே தினம் உருவான வரலாறு.!

51பார்த்தது
மே தினம் உருவான வரலாறு.!
1880 காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் அவதிப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்தது. அந்த வரிசையில் 1886ம் ஆண்டு சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டமும், ஹேமார்க்கெட் படுகொலை சம்பவமும் தொழிலாளர் போராட்டங்களில் மைல் கற்களாக அமைந்தது. அதைத் தொடர்ந்து 1889 ஜூலை 14 பாரிஸ் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, 1890 மே 1 முதல் உலகளாவிய தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி