திருவள்ளூர் சாஸ்திரி நகரில் 500 வீடுகளில் 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பட்டாவை, கிராம நத்தம் பட்டாவாக மாற்ற பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கின்றனர். மேலும், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மழைநீர் வடிகாலுக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பகுதிவாசிகள், அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வீடுகளில் கறுப்பு கொடி கட்டி, சாலை மறியலில் ஈடுபட முயன்றதோடு தேர்தலையும் புறக்கணிக்க தயாராக உள்ளனர்.