வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கி ரூ.20 லட்சம் திருட்டு

77பார்த்தது
வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கி ரூ.20 லட்சம் திருட்டு
ஈரோடு பழைய மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சிராஜூ தீன் (70) என்பவர் நேற்று (ஏப்ரல் 13) காலை தனது குடும்பத்துடன் ஊட்டிக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு 12:30 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது நடுவீட்டில் ஓடு பிரிந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பீரோவை சோதனை செய்தார். அப்போது, அதில் இருந்த ரூ.20 லட்சம் பணம், 20 சவரன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஈரோடு டவுன் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி