உண்மையான தொழிலாளர் யார்?

82பார்த்தது
உண்மையான தொழிலாளர் யார்?
தொழிலாளர்களின் பணி உலக வாழ்க்கையில் இன்றியமையாதது. அனைவருமே ஒரு விதத்தில் தொழிலாளர்கள் தான். இருப்பினும் கடினமான உடல் உழைப்பு வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் முக்கியமானவர்கள். தொழிலாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, மே 1 உலக தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உரிமைகளை நிலைநாட்டும் அதே நேரத்தில், கடமைகளையும் தொழிலாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அப்படியானால் தான் உண்மையான தொழிலாளராக இருக்க முடியும்.