மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வனத்துறையினர் அதனை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பால சரஸ்வதி பள்ளி அருகே ட்ரோன் மூலம் சிறுத்தை பதுங்கியிருக்கும் பகுதியை கண்டறியும் முயற்சிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அதே போல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.