தண்ணீர் தொட்டியில் விழுந்து 30 குரங்குகள் பலி

561பார்த்தது
தண்ணீர் தொட்டியில் விழுந்து 30 குரங்குகள் பலி
தெலங்கானா மாநிலம் நந்திகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட நாகார்ஜுனா சாகர் அருகே தண்ணீர் தொட்டியில் 30 குரங்குகள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 200 குடும்பங்களுக்கு இந்த தண்ணீர் தொட்டி மூலம்தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாமல் தொட்டியை நகராட்சி ஊழியர்கள் உலோகத் தகடுகளை போட்டு மூடி வைத்திருந்தனர். குரங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக தொட்டிக்குள் இறங்கி நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி